ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான '7ம் வகுப்பு சி பிரிவு' தொடரின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீது கிருஷ்ணன். அதன் பிறகு பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். டான்சிங் கில்லாடிஸ், வொண்டர் வுமன், பேட்ட ராப், ஆயுத எழுத்து நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றார். சின்னத்திரை தொடர்கள் சிலவற்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 10 எண்றதுக்குள்ள, ரங்கூன் படங்களில் நடித்தார்.
தற்போது 'இருளில் ராவணன்' என்ற படத்தில் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.இந்த படத்தில் துஷாந்த் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமவுலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யு-டியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கவாஸ்கர் அவினாஸ் இசையமைத்து வருகிறார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஏ.வி.எஸ்.சேதுபதி.
படம் பற்றி இயக்குனர் சேதுபதி கூறியதாவது: முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. என்றார்.