தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்.தாணு. இவரது வி கிரியேஷன் அலுவலகம் தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ளது. சில இளைஞர்களும், பெண்களும் வி கிரியேஷன் அலுவலத்திற்கு சென்று அதன் இணை இயக்குனர் ஜெகதீசனை சந்தித்து எங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பணம் வாங்கினீர்கள், ஆனால் பல மாதங்களாக எங்களை அழைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதர்ச்சி அடைந்த ஜெகதீசன் எங்கள் நிறுவனம் சார்பில் எந்த படத்திற்கும் நடிகர், நடிகை தேர்வு நடத்தவில்லை, இதற்காக எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றார். இதை தொடர்ந்து வந்தவர்களின் பணம் பெற்ற நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஜெகதீசன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வி கிரியேஷன் பெயரில் போலியான விளம்பரம் செய்து இதுபோன்று பல நபர்களிடம் ஒரு கும்பல் பணமோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், யாராவது எங்கள் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பேசினால் தகவல் தெரிவிக்குமாறும் வி கிரியேஷன் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.