என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் பேபி என்பவர் தமிழக அரசியலில் நேர்மையாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து, அதில் அவர் கக்கனாக நடித்தும் இருக்கிறார். அவரே திரைக்கதை, வசனத்தையும் எழதியிருக்கிறார். ஏ.எஸ்.சந்தோஷ்ராமா இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் பேபி கூறியதாவது : கக்கன் மீது மாறாத பற்று கொண்டவன் நான். அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பதாற்காக கடந்த 30 வருடங்களாக பணம் சேர்த்து வந்தேன். பிரபல நடிகர்கள் நடித்தால் அவர்கள் முகம்தான் தெரியும், கக்கன் பின்னனுக்கு தள்ளப்படுவார் என்பதால் நானே கக்ககான நடித்தேன். எல்லா பணிகளையும் நானே செய்ய முடியாது என்பதால் இயக்கும் பொறுப்பை இன்னொருவருக்கு கொடுத்தேன்.
இன்றைய தலைமுறையினருக்கு கக்கன் பற்றித் தெரியாது. இந்த படத்திற்கு பிறகு அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். அரசியலுக்கு வரும் ஆசை ஏற்பட்டால் அவரையே முன்மாதிரியாக கொள்வார்கள். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறேன். இதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை கக்கன் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன். என்றார்.