பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மகிகாந்தம் என்பவர் ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் சிட்னியில் ரயில் இன்ஜின் டிரைவராக(லோகோ பைலட்) இருக்கிறார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அவர் தயாரித்து, நடித்துள்ள படம் 'நாயாடி'. கேரளாவில் உள்ள மலைகளில் வாழும் ஆதிகுடி மக்கள் நாயாடிகள். இவர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளார். இதில் அவருடன் துணிவு படத்தில் நடித்த காதம்பரி, யூடியூபர் பேபி, மாளவிகா மனோஜ், அரவிந்த்சாமி, நிவாஸ் சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளர். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 16ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி ஆதர்ஷ் மதிகாந்தம் கூறியதாவது: திரைப்படத் துறையில் பங்காற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு 'நாயாடி' திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசும்.
பல்லாண்டுகளாக துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இத்திரைப்படம் விவரிக்கும். என்றார்.