'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாகுபலி, பாகுபலி- 2, ஆர்ஆர்ஆர் படங்களைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதியுள்ளார். கீரவாணி இசையமைக்கிறார். தென் ஆப்பிரிக்கா காடுகளில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஆக்ஷன் அட்வென்சர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஏராளமான மிருகங்களும் இடம் பெறுகின்றன. இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 2025ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. மகேஷ்பாபுவின் 29வது படமான இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.