சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை | 'சூது கவ்வும் 2' : ஹரிஷா ஜஸ்டின் முதல் படம் 13ம் தேதி வெளியாகிறது |
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 260க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து பற்றி திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன்
நடிகர் கமல் வெளியிட்ட பதிவு : ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
சூரி
நடிகர் சூரி வெளியிட்ட பதிவு : நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது!! இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி
காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி வெளியிட்ட பதிவு : ‛‛மிகவும் வெட்கக்கேடான ஒரு விஷயம். இந்த காலத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள் வளர்ந்த நிலையில் எப்படி 3 ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்துள்ளாகும். இதற்கு பொறுப்பு ஏற்க போவது யார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரார்த்தனை செய்கிறேன்'' என கூறியுள்ளார்.
பிரியா ஆனந்த்
நடிகை பிரியா ஆனந்த் கூறுகையில், ‛‛மிகப்பெரிய பேரழிவு, ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்'' என பதிவுட்டுள்ளார்.
சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட பதிவு : ‛‛ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து மற்றும் பெரும் உயிர் இழப்புகள் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. உயிர்களைக் காப்பாற்ற ரத்தப் பிரிவுகளுக்கான அவசரத் தேவை இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். உயிர்காக்கும் ரத்த அலகுகளை தானம் செய்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எங்கள் ரசிகர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள்'' என குறிப்பிட்டுள்ளார்.
சோனு சூட்
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து செய்தியால் மனம் உடைந்தது. இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கல்கள். துயரத்தில் உள்ளவர்களுக்கு எங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டிய நேரம் இது.