கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
பிரபல ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா(49) பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.
அதன்பின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருடன்(37) நெருக்கமானார் மலைக்கா. இருவரும் காதலித்து வருகின்றனர். லிவிங் டுகெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் அவர்களுக்கு இடையே 12 வயது இடைவெளி காரணமாக விமர்சிக்கபட்டும் வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் இருவரும் கவலைப்படவில்லை. இருவரும் பொதுவெளியில் நெருக்கமாக சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அர்ஜுன் கபூர் படுக்கையில் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, அதற்கு கேப்ஷனாக "எனது சொந்த சோம்பேறி பையன்" என குறிப்பிட்டு அதிர்ச்சி கொடுத்தார் மலைக்கா அரோரா. இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.