ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
2005ல் வெளிவந்த 'உள்ளம் கேட்குமே' படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானாலும், 'அறிந்தும் அறியாமலும்' படம் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நான் கடவுள்' படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வெற்றி அவரை பி அன்ட் சி சென்டர்களிலும் கொண்டு போய் சேர்த்தது. 'ராஜா ராணி' படம் அவருடைய இமேஜை இன்னும் கொஞ்சம் அதிகரித்தது. செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த 'இரண்டாம் உலகம்' படத்தில் ஆரம்பமான அவரது சரிவை சரி செய்ய இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அதன்பின் கடந்த பத்து வருடங்களாக அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் வெற்றிப் படங்களாக அமையவில்லை.
இருந்தாலும் 2021ல் ஓடிடி தளத்தில் வெளிவந்த அவரது 'டெடி, சார்பட்டா பரம்பரை' ஆகிய படங்கள் அவருக்கான இடத்தை அப்படியே தக்க வைத்தது. 'சார்பட்டா பரம்பரை' படத்திற்காக அவர் கொடுத்த ஈடுபாடு, அவரது உழைப்பு, நடிப்பு என விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். அப்படம் மட்டும் தியேட்டர்களில் வெளிவந்திருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்று திரையுலகினர் பேசினார்கள். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'அரண்மனை 3, எனிமி, கேப்டன்' ஆகிய படங்களும் சரியாகப் போகவில்லை.
தியேட்டர் வசூலில் தனக்கான இடத்தை மீண்டும் காப்பாற்ற முத்தையா இயக்கத்தில் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்துள்ளார். அப்படம் இந்த வாரம் ஜுன் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. முத்தையா இயக்கும் படங்கள் ஒரு ஆவரேஜான வெற்றியை எப்போதும் கொடுத்துவிடுகிறது. அந்த ஒரு ஆவரேஜான வெற்றியாவது ஆர்யாவுக்குக் கிடைத்தால் அவரது அடுத்த வெளியீடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.