பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் முக்கிய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஆனால் அமலாக்கத் துறையின் செய்தி குறிப்பில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்று இடம் பெற்றிருப்பதை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னை பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.