இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்,'புஷ்பா' படத்தில் நடித்த ராஷ்மிகாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளிவந்தன. அது குறித்து ஐஸ்வர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் தரும் விதத்தில் டுவீட் செய்துள்ளார் ராஷ்மிகா. அதில், “ஹாய் அன்பே, இப்போதுதான் இது பற்றி பார்த்தேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். இது பற்றி நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் 'பர்ஹானா' படத்திற்கு எனது சிறப்பான, அன்பான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் பதிவை ரிடுவீட் செய்து ஹாட்டின் எமோஜிகளைப் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.