அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கோடை விடுமுறை சுட்டெரிக்கும் வெயிலுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கும் வெயிலில் மக்களும் தியேட்டர்கள் பக்கம் போக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதக் கடைசியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குக் கூட எதிர்பார்த்த அளவிற்கும் பெரிய வரவேற்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும் 19ம் தேதி தற்போது வரை மூன்று படங்களுக்கான வெளியீட்டு அறிவிப்புகளே வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', விஜய் ஆண்டனி இயக்கியும் நடிக்கும் 'பிச்சைக்காரன் 2', ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், வரலட்சுமி, ஆரவ் நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் எப்போதே வர வேண்டியது. சில பல சிக்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளியாக உள்ளது. இந்த வருடம் ஓடிடி தளங்களில் இதுவரையிலும் எந்த ஒரு படமும் நேரடியாக வெளியாகவில்லை. முதல் படமாக 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் இருக்கிறது.
மே 19 போட்டியில் வேறு சில படங்கள் சேருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.