ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஹிட்லிஸ்ட்' . இந்தப் படத்தை 'தெனாலி', 'கூகுள் குட்டப்பா' படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர்கள் சூர்யாகதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடிக்கிறார்கள். தற்போது இவர்களுடன் வில்லனாக கவுதம் மேனன் இணைந்துள்ளார். இவர்கள் தவிர சரத்குமார் சித்தாரா, முனீஸ்காந்த், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.




