'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படம் வரைக்கும் தொடர் வெற்றிகளை மட்டும் குவித்து வந்துள்ளார். தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி.
இந்நிலையில் அவரது கனவு படமான மகாபாரதம் பற்றி பல இடங்களில் பகிர்ந்துள்ளார். அதேபோல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அளித்த பேட்டியில் மகாபாரதம் பற்றி கூறியுள்ளார். அதன்படி, "நான் மகாபாரதத்தை படமாக்க ஒரு சில வருடங்களோ அல்லது அதற்கும் மேல் கூட ஆகலாம், ஏனெனில் மகாபாரதம் பற்றி உள்ள அனைத்து விதமான புத்தகங்களை நான் தேடி படிக்கிறேன். ஆனால், இப்போது மகாபாரதம் பற்றி என்னிடம் நீங்கள் கேட்டால் என்னால் உறுதியாக ஒரு விஷயம் சொல்ல முடியும், மகாபாரதத்தை குறைந்தது 10 பாகங்கள் கொண்ட படங்களாக தான் உருவாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.