ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி உருவாகும் இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் மே 9ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த டிரெய்லரானது இந்தியாவில் மட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், ஜப்பான், இலங்கை, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளனர்.
ஆதிபுருஷ் படம் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரீ பெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.