நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் மற்றும் நடிகரான கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது இயக்கத்தை விட நடிப்பில் பிஸியாக உள்ளார். இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் சில ஆண்டுகளாக தயாராகி வருகிறது. தற்போது இந்தப்படம் ரிலீஸிற்காக ரெடியாகிறது. இதுஒருபுறம் இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன் நடித்துள்ளார்.
இந்தப்படம் குறித்து ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி, "லியோவில் நான் நடிப்பதற்கு காரணம் லோகேஷ் தான். முதலில் விக்ரம் படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அப்போது என்னால் நடிக்க முடியவில்லை. லியோ படத்தில் விஜய்யுடன் முழு படத்தில் பயணிப்பேன். அந்த அளவிற்கு முக்கியமான கதாபாத்திரம். ஆனால், எனக்கும் மிஷ்கினுக்கும் இடையே எந்த காம்பினேஷன் காட்சிகள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.