லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது. 1500 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் ‛தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமியும், ‛தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு மன்னனும் போட்டியிடுகின்றனர். இரு அணிகள் சார்பிலும் துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இரு அணிகளும் வெளியூர் மற்றும் உள்ளூர் உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஓட்டு கேட்டனர். மன்னன் அணி வெள்ளி குங்கும சிமில், 1000 ரூபாய் மதிப்புள்ள டிபன் பாக்ஸ் பரிசு கொடுத்தனர் என்றால், முரளி அணியினர், செமயாக கவனித்து விட்டனர். வெளியூர் உறுப்பினர்களுக்கு தரமணி அடையார் பகுதிகளில் இருக்கும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, நேற்று ராதா பார்க் ஓட்டலில் நடந்த சந்திப்பில் ஐ.டி கார்டுடன் வந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ.25,000 ரொக்கமாக கவரில் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்த பணத்தை வாங்க, பல கோடி போட்டு படத்தை எடுத்த தயாரிபாளர்கள் சிலர் நேற்று அடித்து கொண்டதை வேடிக்கையாக மற்ற சில தயாரிப்பாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் முரளி ராமசாமி, நலிந்த மற்றும் சிறு தயாரிப்பாளர்களுக்கு வீடு மனைக்கு இடம் வாங்கி வைத்துள்ளார். அதை வீடாக நான் மாற்றி தர ஏற்பாடு செய்வேன் என்றும் பேசினார். இன்று நடந்த தேர்தலில், பண பட்டுவாடா மற்றும் வாக்குறுதிகளை பார்த்தால் முரளி அணி தான் வெற்றி பெறும் என்று தெரிகிறது. நாளை காலை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்று நாளை தெரிந்துவிடும்.