நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ரன். இந்த படத்திற்காக லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர்கள் கோவை, மதுரை போன்ற ஊர்களில் தியேட்டர் விசிட் செய்து வருகின்றனர். கோவையில் நேற்று ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர் பேசியது , " ருத்ரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மூன்று வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது. சிறிய படங்களுக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்" என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.