''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2023ம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப கட்டத்திலேயே விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடந்து வருகின்றன. தனது சொந்த மைதானத்தில் கடந்த வாரம் இந்த ஆண்டிற்கான முதல் போட்டியை சென்னை அணி விளையாடியது. அப்போது தனுஷ், சிவகார்த்திகேயன், வரலட்சுமி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள், நடிகைகள் போட்டியைக் கண்டுகளித்தனர்.
நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியை தனது சொந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடி தோல்வியுற்றது. நேற்றைய போட்டியையும் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு பார்த்தனர். விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர் தொகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் போட்டியைக் கண்டு ரசித்தார்.
நடிகை த்ரிஷா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், மேகா ஆகாஷ், சதீஷ், ஹரிஷ் கல்யாண் நேற்றைய போட்டியைப் பார்த்தார்கள். ஐஸ்வர்யா அவரது 'சொப்பன சுந்தரி' குழுவினருடன் வந்திருந்தார்.
மலையாள நடிகர்களான ஜெயராம், பிஜு மேனன் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய போட்டியை ரசித்தார்கள். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். கேரளாவுக்காக ஐபிஎல் அணி எதுவும் இல்லாதது குறிப்பிட வேண்டிய ஒன்று.