நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

சூர்யா நடிக்கும் 42வது படத்தை இயக்கி வருகிறார் சிவா. திஷா பதனி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக 180 நாட்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் சூர்யா. சரித்திர கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யா 42-வது படத்திற்கு அக்னீஸ்வரன் என்று தலைப்பு வைக்க சிறுத்தை சிவா முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன்பு அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்ற படங்களுக்கு வி செண்டிமென்டில் தலைப்பு வைத்து வந்த சிவா, அதையடுத்து ரஜினி நடிப்பில் இயக்கிய படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தார். இப்போது சூர்யா படத்திற்கும் அதே பாணியில் அக்னீஸ்வரன் என்று அ செண்டிமென்ட்டில் தலைப்பு வைக்க முடிவு எடுத்திருக்கிறாராம்.
அதுதொடர்பாக ஒரு போஸ்டர் ஒன்றும் சமூகவலைதளங்களில் உலா வருகிறது. ஆனால் இதை தயாரிப்பாளர் தனஞ்செயன் மறுத்துள்ளார். சூர்யா 42 பட தலைப்பு என்ன என்பது அடுத்தவாரம் தெரிந்துவிடும்.




