ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐசுஜான்சி. அவர் தற்போது நாவல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை எண்ட்லஸ் புரொடக்ஷன் சார்பில் அருணாசலகுமார் தயாரிக்கிறார். புதுமுகங்கள் அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தர்ராஜன் நாயகன், நாயகிகளாக நடிக்கிறார்கள். ரகுநாத் இசை அமைக்கிறார், வசந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
படம் பற்றி ஐசுஜான்சி கூறியதாவது: நிஜத்தை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம். என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். இதில் திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். என்றார்.