பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை திரும்பி உள்ள படக்குழு ஓய்வில் உள்ளனர். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த காட்சியை அவரது குடும்பத்தார், வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ விஜய்யின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நடிகர் விஜய், அச்சிறுமியை போனில் தொடர்பு வீடியோ காலில் பேசினார். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.