பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் |
90 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். 'விழா' என்ற படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'மாஸ்டர்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது 'அறிண்டம்', 'அர்த்தம்'. 'கரா', 'அமிகோ கேரேஜ்', 'ரப்பப்பரி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
அடுத்து அவர் நடிப்பில் 'நீலகண்டா' என புதிய படம் உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை ராகேஷ் மாதவன் என்பவர் இயக்கி வருகிறார். எல்.எஸ்.புரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பிரசாந்த் பிஜி இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.