பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என அவரே ஒரு நேர்காணலில் கூறினார். இந்நிலையில் பாண்டிராஜ் தனது அடுத்த பட கதையை கவனமாக எழுதி வருகிறார். இந்த கதையை விஷாலிடம் கூறியுள்ளார். அவரும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் 'கதகளி' என்ற படத்தில் பணியாற்றினர். அந்த படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.




