ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
1972ம் ஆண்டு வெளியான கிளாசிக் காமெடி படம் 'காசேதான் கடவுளடா'. இந்த படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தற்போது அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் முத்துராமன் நடித்த கேரக்டரில் மிர்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் நடித்த கேரக்டரில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பிரியா ஆனந்த், லட்சுமி பிரியா, ஊர்வசி நடித்துள்ளனர். நாளை இந்த படம் வெளிவருகிறது.
படம் குறித்து சிவா கூறியதாவது: 'காசேதான் கடவுளடா' எவராலும் திரும்ப எடுக்க முடியாத கிளாசிக் காமெடி படம். என்றாலும் அதை நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். அதனால் அந்த படத்தோடு இதனை ஒப்பிடாமல் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். அந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியான காமெடி அப்போது பெரிதாக ரசிக்கப்பட்டது. அதனை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றுவது சவால். அதனை இயக்குனர் கண்ணன் திறம்பட கையாண்டிருக்கிறார். இந்த படத்தை மக்கள் வரவேற்றால் இதுபோன்ற பல கிளாசிக் படங்கள் மீண்டும் வரும். என்றார்.