லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை | புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா |
இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. இந்த படத்தில் நடிகர்கள் போஸ் வெங்கட், குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தனர். மனிதத்தையும், மத நல்லிணக்கத்தை பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கில் இந்த படத்தை நடிகர் வெங்கடேஷும், ஹிந்தியில் இந்த படத்தை நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்கவுள்ளனர். இரண்டு மொழிகளிலும் இந்த படத்திற்கு 'அயோத்தியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.