நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் |

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை செய்தது. அப்படத்தில் ஒரு காட்சியில், இதுவரைக்கும் பக்காவா பேசிக்கிட்டு இருந்த திடீரென்று பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே என்று ஒரு டயலாக் பேசி இருப்பார்.
இந்த டயலாக்கின் பின்னணியில் தன்னை அவர் பழி வாங்கி விட்டதாக ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படம் வெளியானபோது பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதையும், கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது. இதையடுத்து கே. பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி தனது உதவியாளருக்கு ரூ 10 லட்சம் வாங்கி கொடுத்து இருக்கிறார் பார்த்திபன். இது எல்லாமே கோமாளி படம் திரைக்கு வந்த நேரத்தில் நடந்துள்ளது.
இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி ஒரு டயலாக்கை அவர் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ள பார்த்திபன், அந்த டயலாக்கை முதலில் கேட்டு நானும் சிரித்து விட்டேன். ஆனால் நல்லா இருந்த நீ என்னடா பைத்தியம் ஆயிட்டியே என்பதை சொல்வதற்காகவே அவர் அப்படி வைத்திருப்பதை பின்னர் தான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ள பார்த்திபன், என்னை பழி வாங்கும் நோக்கத்தில் அந்த டயலாக்கை பிரதீப் ரங்கநாதன் வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.