ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லைலா. திருமணம், குழந்தை பிறப்பு என வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றதால் சினிமாவை விட்டு சிலகாலம் விலகினார். நீண்ட இடைவெளிக்கு பின் கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் வதந்தி வெப்சீரிஸில் நடித்தார். இப்போது ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் நடிக்கும் நிலையில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருக்கிறார். லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. தமன் இசையமைக்கிறார்.
ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.