காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
யு டியூப் வீடியோ தளம் கடந்த சில வருடங்களில் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. ஓடிடி தளங்களில் ஒரு படம் எந்த அளவுக்கு பார்க்கப்பட்டது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், யு டியூபில் ஒவ்வொரு வீடியோவும் எந்த அளவிற்கு பார்க்கப்பட்டது என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.
தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு ஹிந்தி யு டியூப் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பு உண்டு. அங்கு எந்தப் படங்கள் வரவேற்பு பெறும் என்பதைச் சொல்லவே முடியாது. தென்னிந்தியாவிலிருந்து ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் பெல்லம்கொன்டா சீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங் நடித்து தெலுங்கில் வெளிவந்த 'ஜெய ஜானகி நாயகா' படம் ஹிந்தியில் 'கூன்கர்' என்ற பெயரில் டப்பிங் ஆகி நான்கு வருடங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் 700 மில்லியன் பார்வைகளைப் பெற்று, அதாவது 70 கோடி, முதலிடத்தில் உள்ளது. அப்படத்திற்குப் பின்புதான் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் உள்ளன.
தமிழிலிருந்து ஹிந்தியில் டப்பிங் ஆகி யுடியூபில் வெளியான படங்களில் ஜோதிகா நடித்து தமிழில் வெளிவந்த 'ராட்சசி' படம் 'மேடம் கீதாராணி' என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் ஆகி 321 மில்லியன் பார்வைகளைப் பெற்று, அதாவது 32 கோடி, முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் விஜய் நடித்த 'ஜில்லா' படம் 'போலீஸ்வாலா குண்டா 2' என்ற பெயரில் வெளியாகி 257 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
2019ல் வெளியான 'ராட்சசி' படத்தை கவுதம்ராஜ் இயக்கியிருந்தார். ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.