நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

விஜய் டிவியில் 'சரவணன் மீனாட்சி', 'ராஜா ராணி' மற்றும் 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களை இயக்கி வெற்றி பெறச் செய்தவர் இயக்குநர் பிரவீன் பென்னட். தற்போது ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா 2 ஆகிய தொடர்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் ராஜா ராணி 2-விலிருந்து அதன் கதாநாயகி ரியா விஸ்வநாத் வெளியேறிய விவகாரம் குறித்து பரவலாக ஏதேதோ செய்திகள் பரவி வருகிறது.
இதுகுறித்து இயக்குநர் பிரவீன் பென்னட்டிடம் கேட்டபோது, 'கொஞ்ச நாட்களாக நான் அந்த சீரியலை இயக்கவில்லை. அதனால் ஹீரோயின் மாறியதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.
ராஜா ராணி 2விலிருந்து ஏற்கனவே பல நடிகர்கள் விலகியுள்ளனர். தற்போது கதாநாயகி ரியாவும் வெளியேறிய சர்ச்சை தீரும் முன்னரே, இயக்குநர் பிரவீன் பென்னட்டும் விலகிவுள்ள செய்தியானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரவீன் எப்போது விலகினார்? பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசனுக்கும் அவர் தான் இயக்குநரா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.




