நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதை நாயகியாகவும் நடித்தவர் தேவ் கிருஷ்ணன். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் அங்கு புகழ் பெற்றவர். சுவாமி அய்யப்பன், மழையறியாதே தொடர்களில் நடித்தார். தற்போது தேவிகா கிருஷ்ணன் என்ற பெயரில் தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும் இந்த படத்தில் முரளி ராம் கதையின் நாயகனாகவும் தேவிகா கிருஷ்ணன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் ஒரே கட்டமாக நடை பெறவுள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.