சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
ஜம்போ சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரீதர் தயாரிக்க, அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், சயின்பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகும் படம் “நோ எண்ட்ரி. ஆண்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், அஜய் அசோக் இசை அமைக்கிறார்.
ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தை பிரதாப் போத்தனை தேடிபோகிறார் ஆண்ட்ரியா, அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர். அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நாய்களின் வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே படத்தின் கதை.
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இயக்குனர் அழகு கார்த்திக் கூறியதாவது: தமிழில் அரிதாக நிகழும் சயின்ஸ்பிக்சன் வகையில் புதுமையான திரைக்கதையில் அனைவரையும் ஈர்க்கும் கமர்ஷியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத மேகாலயாவின் சிரபுஞ்சி காடுகளில் படமாக்கி உள்ளோம். அதிக மழைப்பொழிவும் இருட்டும் சூழ்ந்த காடுகளில் கடும் உழைப்பை கொட்டி படத்தை உருவாக்கி இருக்கிறோம். பயிற்சி அளிக்கப்பட்ட உயர்வகை நாய்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. என்றார்.