இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
நடிகை அமலாபாலுக்கு எல்லாமே குறுகிய காலத்தில் நடந்து முடிந்தது. சிறிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலாபால் அடுத்த சில படங்களிலேயே விஜய்யுடன் நடித்தார். அடுத்த சில ஆண்டுகளுக்குள் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதற்கடுத்த சில ஆண்டுகளுக்குள் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அடுத்து ஒரு காதல், திருமணம் சர்ச்சையில் சிக்கினார். இப்போது அதிலும் பிரிவு. இப்படி எல்லாமே அவருக்கு வேகமாக நடந்து முடிந்தது. இதனால் வாழ்க்கை அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்து விட்டது. இப்போது அவருக்கு தேவை மன அமைதி. அதை தேடி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான அமலா பால் இந்து மதத்தின் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது அவர் கிறிஸ்தவர் என்பதால் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இருப்பினும் தொடர்ச்சியாக ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் பழநிக்கு வந்து முருகனை தரிசித்து சென்றார்.
தற்போது அவர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று தங்கி உள்ளார். அங்கு இயற்கை உணவு, யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளார். இயற்கையோடு அவர் இணைந்திருப்பதையும், ஆசிரமத்தில் தங்கி இருப்பதையும் தனது இன்ஸ்டாகிராமில் படங்கள், வீடியோக்களாக வெளியிட்டுள்ளார்.