ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'துணிவு' படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்டது. இதுகுறித்த தகவல்களை விக்னேஷ் சிவனும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பிடிக்காததால் அது நிராகரிக்கப்பட்டது. அவரும் கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில் அடுத்து இயக்குவது மகிழ்திருமேனியா, விஷ்ணுவர்த்தனா என்ற விவாதம் நடந்தது. இதில் விஷ்ணுவர்த்தன் இந்தி படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதால். மகிழ்திருமேனிதான் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து திரும்பிய அஜித், மகிழ்திருமேனியை அழைத்து கதை கேட்டுள்ளார். அந்த கதைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட இருக்கிறது. கவுதம் வாசுதேவ மேனனிடம் உதவியாளராக இருந்து 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு இயக்கிய தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்கள் வெற்றி பெற்றது. கடைசியாக இயக்கிய கலக தலைவன் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து அவர் அஜித்தை இயக்குகிறார்.