இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

காதலர் தினத்தை சினிமா பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். விதவிதமான புகைப்படங்கள், பழைய நினைவுகள் என சமூக வலைத்தளங்களில் பல விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்றே காதலர் தினம் பற்றி ஒரு பதிவுட்டுள்ளார். தனது மகன்கள் லிங்கா, யாத்ரா ஆகியோருடன் வீடியோ காலில் பேசும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “உங்களை நேசிப்பவர்களை நேசிப்பதில் மகிழ்ச்சி,” என்று பதிவிட்டு அதில் லிங்கா, யாத்ரா ஆகியோரது பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் பெயர் அதில் இடம் பெறவில்லை.
பிரிவதாக அறிவித்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், இருவரும் ஒன்றாக இல்லை என்பதை இந்தப் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.