தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'விடுதலை' படத்தின் முதல் சிங்கிளான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று யு டியுபில் வெளியானது.
தனுஷ், அனன்யா பட் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். சுகா எழுதியுள்ள இந்தப் பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். யு டியுபில் 15 லட்சம் பார்வைகளை இந்தப் பாடல் கடந்துள்ளது.
இளையராஜா இசையில் தனக்கு நடக்கக் கிடைத்த வாய்ப்பு, எனது அப்பா, அம்மா செய்த புண்ணியம், வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என நேற்று சூரி குறிப்பிட்டிருந்தார். அதே போல, பாடலைப் பாடியுள்ள தனுஷக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். “சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சார் க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூரியின் இந்தப் பதிவுக்கு 'லவ் யு' என பதிலளித்துள்ளார் தனுஷ்.