சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாபி சிம்ஹா நடித்துள்ள படம் வசந்த முல்லை. இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தல் வசந்த கோகிலா என்ற பெயரில் தயாராகி உள்ளது. பாபி சிம்ஹாவுடன் காஷ்மீரா பர்தேசி நடித்துள்ளார். முக்கியமான கேரக்டரில் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், தெலுங்கு, தமிழில் ஆர்யாவும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கி உள்ளார். ரஞ்சனி தல்லூரியுடன் இணைந்து பாபி சிம்ஹாவின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. கன்னட டீசரை சிவராஜ்குமாரும், தெலுங்கு டீசரை சிரஞ்சீவியும் வெளியிட்டனர். ஆனால் தமிழ் டீசரை எந்த ஹீரோவும் வெளியிடவில்லை. நேற்று நடந்த விழாவுக்கு வந்த பத்திரிகையாளர்களை கொண்டு வெளியிட்டனர்.
இதுகுறித்து பின்னர் பேசிய பாபி சிம்ஹா “தமிழிலும் பெரிய ஹீரோவை கொண்டு வெளியிடலாம் என்று யோசித்தோம். அதற்கு சரியான நேரம் அமையவில்லை. என்றாலும் படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள் வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.
பின்னர், ஜிகிர்தண்டா 2ம் பாகத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டபோது “அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை” என்று பதிலளித்தார். என்றாலும் தனக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடித்து கொடுத்த ஆர்யா, ஒரு செல்போன் மெசேஜை பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்து டீசரை வெளியிட்ட சிரஞ்சீவி, சிவராஜ்குமார் ஆகியோரை நெகிழ்ந்து பாராட்டினார் பாபி சிம்ஹா.




