ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றிய ரவீந்தர் சந்திரசேகர் லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளர் ஆனார். சுட்டகதை, நளனும் நந்தினியும், கொலைநோக்கு பார்வை, கல்யாணம், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
இதற்கு இடையில் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் உருவ வேற்றுமை, வயது வித்தியாசம் காரணமாக சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவர் வெளியிடும் காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற படம் அவருக்கு லாபத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவி பேசிய அவர் இதுகுறித்து கூறும்போது “இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அறிவும், திறமையும் அதிகமாக உடையவர்கள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் தயாரித்ததில் இந்த படம் தான் எனக்கு ஒரு லாபகரமான படமாக அமைந்துள்ளது” என்றார். எல்லாம் மனைவி மகாலட்சுமி வந்த நேரம் என்று நண்பர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.
இந்த படத்தில் மஹத் ஹீரோவாக நடித்துள்ளார். சனா ஹீரோயினாக நடித்துள்ளார், நிதின் சத்யா தயாரித்துள்ளார். கார்த்திக் நல்ல முத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், ரமேஷ் இசை அமைத்துள்ளார், ஆர்.அரவிந்த் இயக்கி உள்ளார்.