ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமா உலகிலும், சமூக வலைத்தளங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக அஜித்தின் 62வது படம் பற்றிய பரபரப்புதான் போய்க் கொண்டிருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட உள்ளதாகவும் அவருக்குப் பதிலாக வேறொரு இயக்குனர் இயக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் லண்டனிலிருந்து அடுத்தடுத்து சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நேற்றிரவு பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். லண்டன் மாநகர வீதிகளை படம் பிடித்து அவர் பதிவிட்டுள்ளார்.
அஜித் 62 படத்திற்கான பேச்சு வார்த்தை லண்டனில் உள்ள லைக்கா தலைமை அலுவலகத்தில் அதன் நிறுவனர் சுபாஷ்கரன் உடன் நடந்து வருகிறது. அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் அது குறித்து விவாதித்து வருகிறார்கள். அடுத்த சில நாட்களில் 'அஜித் 62' படத்தின் அப்டேட் வெளியாகும் என்கிறார்கள். அது மாற்றத்துடன் இருக்குமா மாறாமல் இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.