பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியால் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டதோடு வெளிநாடுகளிலும் பாராட்டப்படுகின்ற, தேடப்படுகின்ற ஒரு இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் என்கிற பிரிவில் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை வென்றது. தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இந்த நிலையில் சர்ச்சையான கருத்துக்களை எப்போதுமே கூறி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ராஜமவுலி குறித்து புகழ்ந்து கூறும் விதமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீபத்தில் ராஜமவுலியும் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் சந்தித்து உரையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ராம்கோபால் வர்மா இயக்குனர்கள் கா ஆசிப், ரமேஷ் சிப்பி ஆகிய இயக்குனர்களை எல்லாம் ராஜமவுலி ஓவர்டேக் செய்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், “ராஜமவுலி சார்.. தயவுசெய்து உங்களது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவிலான இயக்குனர்கள் உங்கள் மீதான பொறாமையால் உங்களைக் கொல்வதற்காக ஒரு புதிய ஸ்குவாட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.. தற்போது குடித்திருப்பதால் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
அவர் இந்த விஷயத்தை சீரியஸாக கூறுவது போல தோன்றினாலும் உண்மையில் ராஜமவுலிக்கான மிகப்பெரிய பாராட்டாகவே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி கூறியுள்ளார் என்று தெரிகிறது.