ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ஆஸ்கர் விருதுக்காக ஆண்டு தோறும் ஒரு படத்தை தேர்வு செய்து அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படம் 'செல்லோ ஷோ'(லாஸ்ட் பிலிம் ஷோ) என்கிற குஜராத்தி படம். சினிமா தற்போது டிஜிட்டலில் திரையிடப்படுகிறது. முன்பு பிலிமில் திரையிடப்பட்டது. திரையிடும் கருவியான புரொஜக்டர் மீதும், பிலிம் மீதும் நேசம் கொண்ட ஒரு சிறுவனின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. பான் நலின் இயக்கி இருந்தார்.
இந்த படம் ஆஸ்கர் விருதில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் பான் நலின் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதவாது: என்னுடைய சினிமா குடும்பத்தினரே... மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம். ஒரு குழுவாக நீங்கள் மிகவும் அற்புதமான செயல்பட்டீர்கள். பல்வேறு தடைகளிலும் நீங்கள் நம் கதையின் பக்கமே உறுதியாக இருந்தீர்கள். அதுதான் உலகெங்கிலும் உள்ளவர்களின் இதயங்களை கவர்ந்தது. ஏனென்றால் படத்தை எடுக்கும்போது நம் அனைவருக்குமே தெரியும் இது கடைசி படமாகவோ, கடைசி காட்சியாகவோ இருக்காது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.