''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தேர்வாகியுள்ளது. அது குறித்து இயக்குனர் ராஜமவுலி பலருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது பெரிய அண்ணன் எனது படத்தில் அவரது பாடலுக்காக ஆஸ்கர் நாமினேஷன் பெற்றுள்ளார். இதற்கு மேல் என்ன கேட்பது… ஜுனியர் என்டிஆர், ராம் சரணை விட இப்போது நான் 'நாட்டு நாட்டு' என தீவிரமாக செய்து வருகிறேன். சந்திரபோஸ் காரு வாழ்த்துகள், ஆஸ்கர் மேடை மீது நமது பாடல் நன்றி. பிரேம் மாஸ்டர் இந்தப் பாடலுக்காக உங்களது பங்களிப்பு மதிப்பில்லாத ஒன்று, எனது தனிப்பட்ட ஆஸ்கர் உங்களுக்காகத்தான்.
பைரவாவின் பிஜிஎம் தான் என்னை 'நாட்டு நாட்டு' பாடலுக்காக எனக்கு நீண்ட நேர தயக்கத்திற்குப் பிறகு உத்வேகம் அளித்தது. பைரி பாபு லவ் யு. ராகுல் பைரவா ஆகிய இருவரின் எனர்ஜியான குரல் இந்தப் பாடலை இன்னும் மேம்படுத்தியது. ஜுனியர் என்டிஆர், சரண் ஆகியோரின் ஸ்டைல், சின்க் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம். உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்கள் நடனமாடினார்கள். உங்களை டார்ச்சர் செய்ததற்கு மன்னிக்கவும். ஆனால், அதை மீண்டும் செய்ய நான் தயங்க மாட்டேன்.
எனது பெரிய கனவில் நான் ஆஸ்கர் குறித்து கனவு கண்டதில்லை. ஆனால், ஆர்ஆர்ஆர் மற்றும் நாட்டு நாட்டு ரசிகர்கள் அதை நம்பினார்கள். ஆனால், எனது மனதுக்குள் அந்த ஐடியாவை விதைத்து முன்னேறிச் செல்ல தள்ளிவிட்டார்கள். கார்த்திகேயாவின் ஓய்வில்லாத முயற்சிதான் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, நன்றி கார்த்திகேயா. அங்கீகாரம், மாறுபாடு, ஆற்றல், வித்தியாசமாக மற்றும் சினிமாவாக திறமையாக கையாளப்பட்டதற்கு அனைவருக்கும் நன்றி, இன்னும் ஒரு படி செல்ல வேண்டும்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் திரையுலகத்தைச் சார்ந்த பல பிரபலங்கள் ராஜமௌலிக்கும், கீரவாணிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.