புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் | கர்மா சும்மா விடாது : சமந்தா காதலரின் மனைவி சாபம் | பிளாஷ்பேக்: வெள்ளி விழா ஆண்டில் 'குஷி' | பிளாஷ்பேக் : முதன் முதலாக 3 வேடங்களில் நடித்த சின்னப்பா | பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார் |
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூரலிகான் என பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தனது தம்பி கொலை செய்யப்பட, அதற்கு காரணமானவர்களை பழி வாங்க விஜய் கேங்க்ஸ்டராக உருவெடுப்பதாக கூறப்படுகிறது. இதேபோல்தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் தனது நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க ரஜினி கேங்ஸ்டராக உருவெடுப்பார். அந்த வகையில் ரஜினியின் பாட்ஷாவுக்கும், விஜய் 67 வது படத்தின் கதைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விஜய் 67 -வது படம் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.