மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கன்னடத்திலிருந்து தெலுங்கு திரையுலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து இவரது நிகழ்ச்சிகள், புகைப்படங்கள், பேட்டிகள் என மீடியாக்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் காந்தாரா படம் பார்த்தீர்களா என கேட்டபோது இன்னும் பார்க்கவில்லை என்று கூறினார். இதில் அதிர்ச்சி என்னவென்றால் ராஷ்மிகா மந்தனாவை தான் இயக்கிய கிரிக் பார்ட்டி என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் தான் காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி.
அதனால் ராஷ்மிகா அப்படி பதில் சொன்னதும் கன்னட திரையுலகினரும் பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக கன்னட திரையுலகில் இனி ராஷ்மிகா நடிப்பதற்கு தடைவிதிக்கும் அளவிற்கு சூழல் உருவானது. இந்த நிலையில் காந்தாரா படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கிஷோர் இதேபோன்று கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் 2 படத்தை பார்க்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார். தான் பார்க்கும் படங்களின் வகையிலான பட்டியலில் அந்த படம் இடம் பெறவில்லை என்றும் அதனால் அதைப் பார்க்கும் ஆர்வம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதுவும் கன்னட திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் கிஷோர் கேஜிஎப் படத்தை பற்றி தவறாக கூறியதாக சித்தரித்து செய்திகள் பரவின.
இதை தற்போது மறுத்துள்ள கிஷோர் இதுபற்றி விளக்கம் அளிக்கும் விதமாக கூறும்போது, நான் கேஜிஎப் படத்தை பற்றி எந்த விதமான குறையும் சொல்லவில்லை. அந்த படத்தை பார்க்கவில்லை என்று தான் சொன்னேன். ஒருவேளை காந்தாரா படத்தை பார்க்கவில்லை என்று ராஷ்மிகா கூறியதற்காக அவரை கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது போல, என்னையும் கேஜிஎப் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னதற்காக கன்னடத்தில் நடிக்க தடை விதிப்பார்களோ என்றுதான் நான் கேட்டிருந்தேன்.. நான் சொன்ன கருத்துக்களை திரித்து பரப்பி விட்டார்கள்” என்று கூறியுள்ளார் கிஷோர்.