ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு, அதையடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் நடிகர் யஷின் பிறந்தநாளான நேற்று கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு போஸ்டர் வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளது. அதில், கேஜிஎப் 2 படம் அற்புதமான ஒன்றாகும். விரைவில் இன்னொரு மான்ஸ்டரும் காத்திருக்கிறது. கனவு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற யஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும். விரைவில் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகப் போகிறது என அப்படக்குழு அறிவித்துள்ளது.