என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று டிரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது டுவிட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.
அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி டுவிட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.