என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சின்ன சின்ன வேடங்களிலும் சில சிறுபட்ஜெட் படங்களில் ஹீரோயினாகவும் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமானார். தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குகிறார். சமுத்திரகனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால். படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார். அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் நடித்தார்.
இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பதாவது: படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. நான்கு சண்டை காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்தது. அதனை இப்போது படமாக்கி இருக்கிறோம். சாக்ஷி அகர்வால் இந்த படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோயினாக அறியப்படுவார். சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார். இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மற்றும் டயானாஸ்ரீ என்கிற புதுமுகம், இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.