நிலச்சரிவில் கால் இழந்த பெண்ணுக்கு செயற்கைக்கால் மற்றும் சொந்த வீடு ; மம்முட்டி உதவி | 'கராத்தே பாபு'வில் ரவி மோகனுடன் மோதும் சக்தி வாசுதேவன் | அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஹாலிவுட் படம் 'அவதார் - த வே ஆப் வாட்டர்'. பெரும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் உலக அளவில் ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்து 1.38 பில்லியனை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மட்டும் இரண்டு வாரங்களில் 422 மில்லியன் யுஎஸ் டாலர், உலக அளவில் 958 மில்லியன் யுஎஸ் டாலர் என மொத்தமாக 1.38 யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 11,400 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 400 கோடி வரை வசூலித்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் 'அவதார் 2' படம் தற்போது 14வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த வசூலை இரண்டாம் பாகம் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.