நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் . பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அறிவித்தார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் ஜாக்கி பாக்னானியுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் ஜாக்கி பாக்னானியுடன் இருக்கும் புகைப்படங்களை ரகுல் வெளியிட்டுள்ளார். அதில் ‛‛சான்ட்டா கொடுத்த மிகப்பெரிய கிப்ட் காதலர் ஜாக்கி தான்'' என்று ரகுல் கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ரகுல் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.