போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ். அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ள இந்த படத்தை அந்தாதூண் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ ராம் இயக்கியுள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்த அப்படக்குழு தியேட்டர்களில் டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் திட்டமிட்டபடி மெர்ரி கிறிஸ்துமஸ் படம் நேற்று முன்தினம் திரைக்கு வரவில்லை. தற்போது அப்படத்தின் ரிலீஸை 2023ம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். மேலும் இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி விஜய் சேதுபதியின் டுவிட்டரில் விரைவில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.