மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், முன்னாள் நடிகை லிசி ஆகியோரின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியான 'ஹலோ' தெலுங்குப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நேற்றுடன் அவர் திரையுலகத்திற்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்தப் பதிவின் மூலம் நான் திரையுலகத்தில் நழைந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். எனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஒவ்வொரு புதிய ரசிகர் மூலம் ஒரு துளி அன்பு கிடைக்கப் பெற்றாலும் நன்றி. கடந்த ஐந்து வருடங்களாக எனது பயணத்தில் முதல் நாள் முதல் தற்போது வரை உடனிருக்கும் அனைத்து மொழி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரென்றும் எனக்குத் தெரியும். இனி வரும் காலங்களிலும் நீங்கள் உடனிருந்தால் எனது வளர்ச்சி தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு, தமிழ்? மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் கல்யாணி தமிழில் 'ஹீரோ, மாநாடு' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.